சிறப்பான தொடக்கத்தால் கோப்பையை கைப்பற்றினோம் - கேப்டன் தோனி பேட்டி

திங்கட்கிழமை, 30 மே 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே. - 30  -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் சென்னையில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிச் சுற்றில் சென்னை வீரர்களி ன் சிறப்பான தொடக்கத்தால் கோப்பையை வென்றோம் என்று கே ப்டன் தோனி தெரிவித்தார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்ற கார ணமாக இருந்த துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக் ஹஸ்சே மற்றும் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு அவர் பாராட்டு தெரி வித்தார்.
ஐ.பி.எல். கோப்பையை தோனி, 3 -வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்தார். இறுதிப் போட்டியில் பெங்க ளூரை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது குறித்து சென் னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியதாவது -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முரளி விஜய், மைக் ஹஸ்சே, இருவரின் சிறப்பான தொடக்கமே காரணம். முக்கியத்துவ ம் பெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடினார் கள்.
15 ஓவர் வரை இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய தால் 205 ரன்னைக் குவிக்க முடிந்தது. இதற்காக இருவரையும் பாராட் டுகிறேன். இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் பேட்ஸ்மேன்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி நடந் தது.
தவிர, அஸ்வினின் பந்து வீச்சு மிக அற்புதமாக இருந்தது. உண்மை யில், அனைவரது இதயத்தை தொடும் வகையில் அவரது பந்து வீச்சு இருந்தது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் அரை இறுதியில், கடுமையாக போராடியே நுழைந்தோம்.
இந்த முறை அப்படி இல்லை. தொடக்கத்தில் இருந்தே நன்றாக விளையாடி கோப்பையை வென்றோம். உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் ஐ.பி.எல். போட்டி வந்து விட்டது.
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்தியா முழுக்க விருப்பமாக இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஐ.பி.எல். போட்டி நீண்ட அட்டவனையைக் கொண்டு இருந்தது.
ரசிகர்கள் மிகுந்த களைப்புடன் இருந்த போதிலும், நாள் செல்ல செல் ல ஐ.பி.எல். போட்டியை ரசித்தார்கள். சென்னை ரசிகர்களின் உற்சா கத்தால் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெ றுவதற்கு ரசிகர்களின் ஆதரவே காரணம். நன்னடத்தைக்கான பேர் பிளே விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: