முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை வனிதாவுடன் செல்ல மகன் விஜய ஸ்ரீஹரி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே 31 - நடிகை வனிதா விஜயகுமாருடன் செல்ல அவரது மகன் விஜய ஸ்ரீஹரி மறுத்துவிட்டார். பிரபல தமிழ்நடிகர் விஜய குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவருக்கும் இவரது முதல் கணவர் நடிகர் ஆகாஷிற்கும் இவர்களுக்கு பிறந்த குழந்தையான ஸ்ரீஹரியை யார் வைத்துக்கொள்வது என்பது குறித்து தகராறு இருந்துவருகிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றம் அண்மையில் ஸ்ரீஹரி வாரத்தில் 5 நாட்கள் தனது தந்தையுடனும், 2 நாட்கள் தனது தாயார் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்படி வாரத்தில் 2 நாட்கள் ஸ்ரீஹரி தன்னிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்று அடிக்கடி வனிதா குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்புகூட மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் வனிதா புகார் மனு அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க  மத்திய பகுதி இணை ஆணையர் சங்கருக்கு ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார். இந்நிலையில் வனிதா விஜயகுமார், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ்  ஆகியோர் சனிக்கிழமை காலை மாநகர காவல்துறை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய மாநகர ஆணையர் திரிபாதி, போராட்டத்தை திரும்பப் பெறச் செய்தார். இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இணை ஆணையர் சங்கர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பிற்கும் இடையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விஜய ஸ்ரீஹரி தனது தாயார் வனிதாவுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அங்கிருந்து வனிதா கோபத்துடன் வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago