முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் பொதுப் பணித்துறையில் ஊழல்

திங்கட்கிழமை, 30 மே 2011      அரசியல்
Image Unavailable

ஈரோடு, மே- 30 - கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றிபெற்று பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நேற்று ஈரோடு வந்தார். பின்னர் அவர் ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து மக்களின் பேராதரவுடன் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை அகற்றிவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்ற தினம் தினம் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நமது முதல்வர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் ஊழலந் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஆணைப்படி நீதி விசாரணை நடத்தப்படும்.
கடந்த தி.மு.க. குடும்ப ஆட்சியில் மணல் கொள்ளை ஏகபோகமாக நடந்தது. இந்த ஆட்சியில் அதுபோல் நடைபெறாத வகையில் பார்த்துக்கொள்ளப்படும். இன்னும் ஒரு வாரத்தில் மணல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழக நதிகள் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தேசிய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். வழக்கமாக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதிதான் திறக்கப்படும். ஆனால் இம்முறை ஜூன் 6 ம் தேதியே மேட்டூர் அணையை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது ஒரு சாதனை ஆகும். கடைமடைவரை தண்ணீர் கிடைக்க மேட்டூர் வாய்க்கால் தூர்வாரப்படும். மேலும் ஈரோட்டில் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago