காமன்வெல்த் ஊழல் - மேலும் 2 அதிகாரிகள் கைது

No Image5 0

புது டெல்லி,பிப்.25 - காமன்வெல்த் ஊழல் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு முன்னாள் அதிகாரிகள் லலித் பானட் மற்றும் வி.கே.வர்மா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இருவரும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகியதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
விளையாட்டு போட்டிகளுக்கான ஸ்கோர் டைமிங் மற்றும் போட்டி முடிவுகளை காண்பிக்கும் கருவிகளை ரூ 107 கோடிக்கு வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக லலித் பானட் மற்றும் வர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது கிரிமினல் சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் கேட்டதையடுத்து காமன்வெல்த் அமைப்பு குழு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தங்களது பதவிகளை தவறாக பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வர்மாவும், பானட்டும் மறுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ