முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத்துரோக வழக்கு: முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஏப்.1 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை சந்திக்க அனுமதி அளிப்பது தொடர்பாகவும் நேற்று நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தெரிகிறது.  நேற்று வழக்கு விசாரணையின் போது முஷாரப் நேரில் ஆஜரானார்.

விசாரணையின் போது முஷாரப் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிக்குமாறு கோருவோம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று முஷாரப் நேரில் ஆஜரானார். அவர் வருகையை எதிர்பார்த்து முன்னதாகவே நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கைது செய்யுமாறு அப்போது அதிபராக இருந்த முஷாரப் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, சவுத்ரி முகமது அஸ்லம் கும்மன் கடந்த 2009-ம் ஆண்டு முஷாரப் மீது புகார் செய்ததையடுத்து, வழக்கு தொடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் வரலாற்றிலேயே நீதிமன்ற கிரிமினல் குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தான். இதற்கிடையில் முஷாரப், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்