ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றவாளி

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம். ஏப்.2 - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் இஹுட் ஆல்மர்ட் மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

அந்நாட்டு வரலாற்றில் ஊழல் குற்றசாட்டுக்கு சிறைதண்டனையை ஏதிர்நோக்கும் முதல் பிரதமர் இவர் ஆவார். இது தொடர்பான வழக்கு டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட தீர்ப்பை அளித்த நீதிபதி டேவிட் ரோஸன், ஊளஸ் அரசியல் நாட்டுக்கு சிரழிவை ஏற்படுத்தியுள்ளது. அரசு செல்வங்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசம் சென்றுள்ளன என்று கண்டனம் தெரிவித்தார். 

இந்த வழக்கில் முன்னாள் மேயர் உரி லுபோலியன்ஸ்கி, முன்னாள் ஹபோலிம் வங்கி தலைவர் டான் டங்க்னர், ஆர்மர்ட் அலுவலக உதவியாளர் ஷுலா ஸாகென் உள்பட 13 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தன. அவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஜெருச்லேம் மேயராதவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் இருந்து ஆல்மர்ட் மீது, குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் லட்சக்கணக்கான டாலர்  தொகையை கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற அவர், மேற்கண்ட ஊழல் புகாரால் எழுந்த நேருக்கடி காரணமாக பதவி விலகினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: