உலக கோப்பை - ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

Aus-NZ

நாக்பூர், பிப்.25 - இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் 10வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 வது லீக் ஆட்டம் மாராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செந்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து கென்யாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி 1999 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இருந்து தொடர்ந்து 24 ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணியின் தொடர் வெற்றியை நியூசிலாந்து அணி முறியடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் தடுமாறியது. சுழற்பந்தை எதிர்கொள்வதில் அந்த அணி திணறியது. இந்த அணியில் வாட்சன், மைக்கேல் கிளார்க், டேவிட் ஹன்ஸி போன்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் முத்திரை பதிக்க கூடியவர்களாக  இருந்தனர். 4 முறை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இந்த உலககோப்பையிலும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள எல்லா வகையிலும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹமீஸ் பென்னட் முதுகெலும்பாக திகழ்கிறார். மேலும் சவுத்தி, ஜேக்கப் ஓரம் போன்ற சிறந்த வீர்களும் உள்ளனர். மெக்குல்லம்,  குப்தில் ரைடர், டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இந்த அணியில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை இழந்தது. இதனை சரிசெய்ய உலககோப்பை ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டிய நிலை உள்ளது. உலக கோப்பையில் இரு அணி 7 முறை  மோதியுள்ளன. இதில்  ஆஸ்திரேலியா 5 ஆட்டத்திலும், நியூசிலாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி  பெற்றுள்ளன.இந்த உலக கோப்பை போட்டியில்  நாக்பூரில் நடைபெறு 2 வது ஆட்டம் ஆகும். நேற்று முன்தினம் நடத்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்துக்கு எதிராக 293 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் நாக்பூர் ஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து  மோதும் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனல் இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ