திருப்பதி கோவிலில் ஜூலை முதல் இலவச சப்பாத்தி

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி,ஜூன்.3 - திருப்பதி கோவிலில் வரும் வட இந்தியா பக்தர்களுக்கு வரும் ஜூலை மாதம் முதல் இலவச சப்பாத்தி வழங்கப்படும் என தேஸ்வஸ்தான நிர்வாக அதிகாரி ஐ.ஒய். ஆர்.கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. அரிசிசாதம், காய்கறிகூட்டு, சட்னி, சாம்பார், ரசம் வழங்கப்படுகிறது. எழுமலையானை தரிசிக்க வடஇந்தியாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

அவர்கள், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள், இதனால் அவர்களுக்கு இலவச சப்பாத்தி வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்ததிட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படுகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டில் வரும் ஜூலை -7  தேதி இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இதற்காக தினமும் 20 ஆயிரம சப்பாத்தி எந்திரத்தின் மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஐ.ஒய் .ஆர். கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.  அன்னதானம் வளாகத்தில் மணிக்கு இந்த எந்திரத்தின் மூலம் 2 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச அனைதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பக்தர்கள் உணவு அருந்துகிறார்கள். விசேஷநாட்களில் 20 ஆயிரம் பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். விரைவில் வட இந்திய பக்தர்களுக்கும் வடஇந்திய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணாராவ் கூறினார். 

இதே போல் மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 5 கோடி செலவில் குடிநீர் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: