எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பை, ஜூன் 4 - நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது. பாணதீர்த்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 வது நாளாக நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 30 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும் உயர்ந்ததுள்ளது. அதோ போல் கடனா, ராமநதி அணைகளிலும் 30 அடி நீர் பெருகியுள்ளது.
அணைப்பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து பாணதீர்த்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியிலும் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் உல்லாச பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் நெல் சாகுபடி ஆயத்த பணியை தொடங்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


