கனிமொழி ஜாமீன் வழக்கு: கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.5 - 2 ஜி வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பின் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் மேலும் ஒரு மாதம் கனிமொழி திகார் சிறையில் இருக்க நேரிடும். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை முடிந்து விட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த வெள்ளிக் கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லி நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைக் காலம் நேற்று முதல் தொடங்குவதால் மேலும் ஒரு மாதம் கனிமொழி சிறையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: