முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: பணப் பரிவர்த்தனை தயாளு அம்மாளுக்கு தெரியும்

வெள்ளிக்கிழமை, 9 மே 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மே 10 - கலைஞர் விடிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற ரூ. 200 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை அந்நிறுவனத்தின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடந்தது என்று கலைஞர் டிவியின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம்  பதிவு செய்தார்.

2007-ஆம் ஆண்டு டிசம்பரில் மாறன் சகோதரர்களுக்கு கருணாநிதி குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கலைஞர் டிவி தொடங்கப்பட்ட போது, அதன் நிர்வாக  இயக்குனராக சேர்ந்தேன். இந்நிலையில், 2008-ஆம் ஆண்டு மீண்டும் மாறன் சகோதரர்கள் கருணாநிதி குடும்பத்தாருடன் சேர்ந்தனர். அப்போது மாறன் சகோதரர்கள் என்னை உடல் ரீதியாகத் தாக்கினர். அதில் எனது காலில் முறிவு ஏற்பட்டது. தயாளு அம்மாள் தான் கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குதாரர். அவரது அறிவுறையின் படியே நான் முக்கிய முடிவுகளை செயல்படுத்தினேன்.

தயாளு அம்மாள் சார்பில் அவரது கருத்துகளைத்தான் கலைஞர் டிவி நிர்வாக குழுக் கூட்டங்களில் முன்மொழிந்தேன். நான் தனிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. சிபிஐ குற்றம் சாட்டியுள்ள ரூ. 200 கோடி தொடர்பான நிதி பரிவர்த்தனை எனது கவனத்துக்கு உட்பட்டே நடைபெற்றது.  அது சட்டப்பூர்வமான பரிவர்த்தனை. நான் அறிந்த வரை அப்பரிவர்த்தனையில் முறைகேடு எதுவும் கிடையாது. முறைப்படி வங்கிகள் மூலம் தான் பணம் கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றது. வரம்புக்கு உட்பட்டே  நான் செயல்பட்டேன். அவை அனைத்தும் தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது என்றார் சரத்குமார்.

இந்த வழக்கில் இவர்களையும் சேர்த்து இதுவரை மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராசா, சித்தார்த் பெஹுரா, சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோய்ங்கா, சஞ்சய் சந்திரா ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் வரும் நாள்களில் பதிவு செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!