நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      வர்த்தகம்
IndiaEco

 

புதுடெல்லி,பிப்.26 - பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் 2011-2011-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

சர்வதேச அளவில் பொருள்களின் விலை உயர்வு மற்றும் எகிப்து, பஹ்ரைன், லிபியா போன்ற நாடுகளில் அரசியல் குழப்பம் ஆகியவைகள் ஏற்பட்ட போதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2011-2012-ம் ஆண்டில் 8.6  சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் வரை ஏற்படும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபையில் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 8.6 சதவீதமாக உள்ளது. தனியார் சேவை, விவசாய உற்பத்தி, தொழில் துறையில் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவைகள் காரணமாக இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணவீக்கமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருந்தது. பணவீக்கமும் ஒரு தடையாக இருந்தது. இந்த பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட 1.6 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து பேசிய பிரணாப் முகர்ஜி கூறினார். உணவு பணவீக்கம் அதிகரிப்பும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சவாலாக வந்துள்ளது என்றும் முகர்ஜி கூறினார். 

பணவீக்கம் நடப்பு 8 சதவீதத்தில் இருந்து வரும் மார்ச் மாதத்தில் 7 சதவீதமாக குறையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: