வருமான வரி உச்சவரம்பு ரூ 2 லட்சமாக உயர்கிறது

tax

 

புது டெல்லி,பிப்.26 - பாராளுமன்றத்தில் வரும் திங்கட்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை தாக்கல் செய்கிறார். 

தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இதை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெசவு தொழில் பிரச்சினையால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக அவர்கள் வாங்கியுள்ள கடன் ரூ 3,400 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் பருத்தி நூல் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கவும் மத்திய அரசு திட்டமுட்டுள்ளது. இநத அறிவிப்பு பட்ஜெட்டில் வரவிருக்கிறது. 

வருமான வரி உச்சவரம்பு ரூ ஒரு லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது. இதை ரூ 2 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் வரவுள்ளதாக தெரிகிறது. வருமான வரி உச்சவரம்புக்கு மேல் ரூ 20 ஆயிரம் வரை அரசு முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்தாலும் அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதை ரூ 50 ஆயிரமாக உயர்த்தும் திட்டமும் உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் மீதான வரிகளை குறைக்கவும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு அரசு விதிக்கும் சுங்க வரி, கலால் வரி ஆகியவையும் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ