முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேற்று காலை மேட்டூர் அணை திறப்பு அமைச்சர்கள் ராமலிங்கம்-பழனிசாமி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சேலம் ஜூன்.- 7 - 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே நேற்று காலை மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் 12 ந் தேதி தண்ணீர் திறப்பு வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் இருப்பதால் முன் கூட்டியே திறந்து விட வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா ஜூன் 6 ந் தேதி திறக்க உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முன்னதாக தேங்காய், பழம், வைத்து காவிரி அன்னைக்கு சிறப்பு nullஜை நடைப்பெற்றது. காலை 9 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.சேலம் கலெக்டர் மகரnullஷனம் முன்னிலை வகித்தார்.
இதில் செம்மலை எம்.பி.,முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஓமலூர் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.பல்பாக்கி கிருஷ்ணன், மேட்டூர் தொகுதி தே.மு.தி.க.எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.பார்த்தீபன், சேலம் வடக்கு தொகுதி தே.மு.தி.க.எம்.ல்.ஏ.மோகன்ராஜ், பொதுப்பணித்துறையின் சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜீனியர் கணேசமரச்சண், மேட்டூர் நிர்வாக என்ஜீனியர் சந்திரசேகர், உதவி நிர்வாக என்ஜீனியர் குமாரசாமி, அணை பிரிவு உதவி பொறியாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் மேல்மட்ட மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு நிர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டது.மாலை 4 மணியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதன் மூலம் சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,திருச்சி, தஞ்சை,நாகை,புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய 11 மாவடங்களைச் சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை சென்றடைய 3 நாட்கள் ஆகும். வருகின்ற 8 ந் தேதி கல்லணையை சென்றடையும் என்று கருதப்படுகிறது.
பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிர் மின் நிலையங்கள் வழியாக திறந்துவிடப்படுவதால் 110 மெகாவாட் மின்சாரமும்,காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை,கோனேரிப்பட்டி, குதிரைகல் மேடு, பவானி கட்டளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கீழ் கதவணை மின்திட்டம் மூலம் 150 மெகாவாட் மின்சாரமும் மொத்தம் 260 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அணை திறக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் உற்பத்தி தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!