முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண நிதி வழங்கிய முதல்வருக்கு மீனவர் கூட்டமைப்பு நன்றி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீனவ சமுதாயத்திற்கு வேட்பாளராக அதிக தொகுதிகளை ஒதுக்கி வெற்றி பெறச் செய்தமைக்காக முதலவர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

மீனவர் சமுதாயத்தினை முன்னேற்றும் வகையில் ஜெயகுமார் சபாநாயகராகவும், ஜெயபாலை மீனவளத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கியமைக்கும், மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசையும் இணைத்து நீதிகாணும் முயற்சிக்கும்,  தமிழக மீனவர்களை பாதுக்கவும், இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும், ஐ.நா. சபையின் அறிக்கையின்பேரில் இலங்கை அதிபர் மீதும், இலங்கை அரசு மீதும் போர் குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைவிதிக்க மத்திய அரசினை வேண்டி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீன்பிடி தடைப்பட்ட காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.1000-லிருந்து 2000-மாக உயர்த்தியதற்கும், மீனவர்கள் மேம்பாட்டிற்கும், மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தவும் மத்திய அரசிடம் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரி பிரதமரிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை அளித்தற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீனவர்களுடைய பல்வேறு பிரச்சனைகளை தொழில் மேம்பாட்டு, நிதி ஆதாரத்தை நிரந்தரமாக உருவாக்குவது, கடற்கரை தோறும் வளர்ச்சி பெற இச்ஙூசிஹங் இஹஙுஙுடுடீக்ஷ  உருவாக்கி பல்வேறு தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அழிந்து வரும் மீன்வளத்தினை பெறுக்கவும், வெளிநாட்டு மீன்பிடி தொழில்நுட்பம், மீன் வளர்ச்சி, தமிழக மீனவர்கள் தெரிந்து பயன்பெறும் திட்டங்களை வகுக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

உள் நாட்டிலுள்ள ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் மீன் வளர்த்து மீன் பிடித்தொழில், செய்யும் அந்தந்த பகுதியை சேர்ந்த பரம்பரை மீனவர்களுக்கே உரிமை வழங்க வேண்டுகிறோம். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எங்கள் கூட்டமைப்பின்  சார்பில் விரைவில் நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony