புது டெல்லி,ஜூன்.- 21 - சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாட்டு வங்கி சட்டங்களின் ரகசிய தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்து அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். பல நாடுகள் இந்த கறுப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமலேயே இருந்து வந்தது. இந்தியாவிலும் இப்பிரச்சினை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும், சுப்ரீம் கோர்ட்டும் இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கி கணக்குகள் இப்போது வெளியாகி உள்ளன. இதில் வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு இந்த பணம் குறைந்துள்ளதாக தெரிகிறது. அதே வேளையில் உலக பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளதால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாக தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
- திருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.