முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.3 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவிலில் சன்னதி முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையிலான சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 15 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் ரூ. 50 ஆக உயர்த்தி உள்ளது. மேலும் பக்தர்கள் செல்லும் இலவச தரிசன பாதையையும் இரு பிரிவுகளாக்கி ஒரு பிரிவு வழியாக செல்வதற்கு ரூ. 15 கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயித்தபடி நேற்று முன்தினம் முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வருவதாக கோவில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!