முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீராராடியா டேப் உரையாடல் 12-ம்தேதி தாக்கல்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 8 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீராராடியாவின் டேப் உரையாடலை வரும் 12-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்வதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசியல் தரகர் நீராராடியாவின் உரையாடல் அடங்கிய டேப் சி.பி.ஐ. வசம் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுத்தர நீராராடியா பல்வேறு அரசியல் பிரமுகர்களுடனும், தொழில் அதிபர்களுடனும் பேசி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஏ.கே.சிங் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நீராராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப் விவரங்களை வரும் 12 -ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம் என்றார். அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் தாக்கல் செய்வோம் என்றும் அவர் மேலும்  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!