தமிழ்நாட்டின் முன்னேற்றதுறையாக மாற்ற முதல்வர் நடவடிக்கை; செங்கோட்டையன் பேச்சு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

ஈரோடு .ஜுலை - 11 - ஈரோடு அருகே உள்ள சிவகிரியில் துல்லிய பண்ணைய விவசாயிகளை பங்கு தாரர் களாககொண்ட துல்லிய பண்ணை உற்பத்தியாளார்களின் பொது க்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.விழாவில் தலைவர் சேனாதிபதி வரவேற்றார்.செயலாளர் குழந்தைவேல் ஆண்டறிக்கைவாசித்தார் .நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி ராமலிங்கம் பேசுகையில், தமிழக விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டுமுன்னதாக பாசனத்திற்காகதண்ணிர் திறந்துவிட உத்திரவிட்டார்.விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொண்டு அவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறர்.என்று கூறினார்.தொடர்ந்து கூட்டத்தில் தமிழக விவசாய துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் -உழுதவன் கணக்கு -என்ற புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றி பேசியதாவது; தமிழ்நாட்டில் உள்ள 12 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுகந்திர வரலாற்றில் முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணிர் திறக்க ஆணையிட்டார். ஹமேலும் விவசாயிகளின்நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உரம் ,விதை,பூச்சி மருந்து போன்ற கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறர்.விவசாயத்துறையில் புத்துணர்வு ஏற்படுத்த  முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறர்.விவசாயிகள் தங்களின் உற்பத்தி நிளைபொருட்களுக்கு உரிய வேண்டும் என்றால் அவர்கள் நேரிடையாக தங்கலது விளை பொருட்களை  விற்பனை செய்யும் நிலைமை ஏற்படவேண்டும்.விவசாய துறையை இந்தியாவிலேயேதமிழ்நாட்டில்முன்னேற்ற துறையாக மாற்ற முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் நேரிடையாககிடைக்கவும்,அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு நேரிடையாக சென்றடையவும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறர்.கடந்த தி.மு.க ஆட்சியில் மண்புழு தயாரிப்பதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் இரவு ,பகல் பாராது விவசாயிகள் நலனை கருதுதில் கொண்டு திட்டங்கள் செயல் படுட்டி வருகிறர். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.க்கள் ஆர்.என்.கிட்டுசாமி,தோப்பு வெங்கடாசலம்.கொடுமுடி யூனியன் சேர்மன் சந்திரசேகர் உட்பச பலர் கலந்து கொண்டனர்.   பட விளக்கம்;ஙுஈரோட்டில் நடைப்பெற்ற துல்லிய பண்ணையவிவசாயிகள் கூட்டத்தில்தமிழகவிவசாயத்துறை அமைச்சர்கே.ஏ செங்கோட்டையன் மற்றும்பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுவிவசாய உட்பத்தி பொருட்களை பார்வையிட்டபோது எடுத்த படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: