முக்கிய செய்திகள்

கச்சத்தீவை மீட்க புரட்சி படையாக நாம் மாற வேண்டும்-சீமான் பேச்சு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

சிவகங்கை, ஜூலை.- 10 - தமிழக மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்க புரட்சிப் படையாக நாம் மாற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கூறியுள்ளார்.
தேவகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயக்க தலைவர் சீமான் பேசியதாவது, கச்சத்தீவை மீட்க நாம் போராட வேண்டும். தமிழினத்தை காப்பதற்கு இப்போது நாதியில்லை. 54 மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது. நமது முன்னோர்களின் சொத்து கச்சத்தீவு. அதனை மீட்க போராட வேண்டும். இது உரிமை பிரச்சினை. இந்திய கடல் எல்லையில் கொன்று குவிப்பதும், தமிழ் தேசிய விடுதலை, ஈழ விடுதலை ஒவ்வொரு தமிழனுக்கும் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். தமிழில் தேசிய கீதம் இல்லை. தமிழ் ஈழ நாடு தோன்றியிருந்தால் தமிழ்தான் தேசியகீதம். சிங்கள ராணுவம் செய்த அட்டூழியத்தை யாருமே தட்டிக் கேட்கவில்லை. குஜராத், ஆந்திரா போன்ற இடங்களில் பூகம்பம் ஏற்பட்ட போது தமிழன் கண்ணீர் விட்டு கதறினான். நாம்தான் உண்மையான தேசிய இனம். உலகத்தில் யார் அடிபட்டாலும் தமிழன் அழுவான்.
ஆனால் அவன் அடிபட்ட போது யாரும் அழவில்லை. உதவிக்கும் வரவில்லை. 12, 13 வயது சிறுமிகளை எய்ட்ஸ் நோயாளிகளை வைத்து சிங்கள ராணுவம் கற்பழித்து கொன்று குவித்துள்ளது. இதை வேடிக்கை பார்த்த நாம் தமிழர்கள்தானா? இலங்கையில் நடந்த சம்பவத்தை இங்கிலாந்து வெளியிட்டது. இந்திய அரசின் நிலை என்ன? தமிழனுக்கு ஜாதி, மதம் கிடையாது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். தமிழ்தான் தமிழனை ஆள வேண்டும். மாற்றத்தை உருவாக்க புரட்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: