எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி,மார்ச்.1 - ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கடந்த 1அரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெற வில்லை என்று கூறி,ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து அதிமுக,மதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.ஆண்டிபட்டி ஒன்றிய குழுவில் 19 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் அதிமுக கவுன்சிலர்கள் 11 பேரும் மதிமுக கவுன்சிலர்கள் 2 பேரும் துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து,இன்று நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.இது குறித்து துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,கவுன்சிலர்கள் சேட் மற்றும் சாந்திமுருகேசன் கூறும் போது ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் கடந்த 1 அரை வருடமாக எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெற வில்லை.இன்று நடைபெறுவதாக இருந்த கூட்டத்திற்கு அழைப்பு வந்ததே தவிர,அஜண்டா வழங்கப்படவில்லை.கூட்டத்திற்கு ஆணையாளரோ,கூடுதல் ஆணையாளரோ வரவில்லை .மேலும் மன்றம் அங்கீகரிக்காத பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.இவற்றையெல்லாம் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.இந்த வெளிநடப்பில் அதிமுக கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம்,மரிக்குண்டு செல்வம்,சாந்தாவேலு,பழனியம்மாள்,கண்ணன்,தங்கம்,விஜயப்பிரியா,வரதராஜன்,சந்தனம்,சிவராமுகந்தசாமி,கதிர்பவுன்ராஜ்,சேட் சாந்திமுருகேசன்,மதிமுக கவுன்சிலர்கள் லோகமணி கனகராஜ்,சரஸ்வதி,சுரேந்திரன் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


