முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்பஜன் சிங்கை அவமதிக்கவில்லை: விஜய் மல்லையா

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 20 - இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் தோனி , விஜய் மல்லையாவின் யூ.பி. குரூப் பின் மெக்டோவல் விளம்பர நிறுவனத்தில் தோன்றுகிறார். அதன் போட்டி நிறுவனமான ராயல் ஸ்டாக் விளம்பரத்தில் ஹர் பஜன் சிங் தோன்றுகிறார். 

இந்த நிலையில், ராயல் ஸ்டாக் விளம்பரத்தில் நடிக்கும் ஹர்பஜன்சிங் கை மெக்டோவல்ஸ் விளம்பரம் கிண்டல் செய்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது ஹர்பஜன்சிங்கிற்கு கெளரவ பிரச்சினையாக மாறி உள்ளது. 

விளம்பரத்தில் ஹர்பஜன் சிங்கை அவமதித்ததாக கூறி தொழில் அதிப ர் விஜய் மல்லையாவுக்கு அவரது தாயார் அவதார் கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது அதிபருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அவரது வக்கீல்கள் கூறியதாவது - விஜய் மல்லையாவின் நிறுவன விளம்பரம் ஹர்பஜனை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும், சீக்கிய சமுதாயத்தையும் அவமதிப்பது போல அமைந்துள்ளது. 

அந்த விளம்பரத்தை 3 நாளில் நிறுத்தவேண்டும். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் தோனிக்கும், ஹர்பஜன் சிங்கிற்கும் உள்ள உறவு பாதிக்காது என்றார். 

மெக்டோவல்ஸ் விளம்பரத்தில், ஹர்பஜன்சிங் போன்ற ஒருவர் அவர து தந்தையிடம் அடிவாங்குவது போலவும், அப்போது தோனி தோன்றி வசனம் பேசுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து விஜய் மல்லையாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது - அந்த விளம்பரத்தில் எந்தவிதமான சர்ச்சையும் இருப்பதாக நினைக்கவில்லை. அந்த விளம்பரத்தில், தனிப்பட்ட முறையில் ஹர்பஜன்சிங்கை அவமதிக்கவில்லை. 

இரண்டு விளம்பர நிறுவனங்களுக்கு உள்ள போட்டி தான். இது தொடர்பாக வந்த வக்கீல் நோட்டீசை எனது வக்கீல்கள் ஆய்வு செய்து வரு கிறார்கள். இவ்வாறு தொழிலதிபர் மல்லையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!