முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்களுக்கு உ.பி.யில் ராகுல் சுற்றுப்பயணம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை 21 - உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இன்றுமுதல் 2 நாட்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். 

உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் உதவியை உ.பி.காங்கிரசார் கேட்டுள்ளனர். உ.பி. காங்கிரசாரின் வேண்டுகோளை ஏற்று அம்மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார். இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு அவர் பல்வேறு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். மாவ், கோரக்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் ராகுல் உரையாற்றுகிறார். பாலியா, வாரணாசி ஆகிய இடங்களில் நடக்கும் கூட்டங்களில் அவர் நாளை உரை நிகழ்த்துகிறார். உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் இளைஞர் காங்கிரசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் ராகுல் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி தெரிவித்தார். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது இளைஞர் காங்கிரசாருடன் ராகுல் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி மற்றும் பாத யாத்திரை நடத்திய ராகுல்காந்தி இப்போது இளைஞர் காங்கிரசாரை ஊக்குவிக்க இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago