முக்கிய செய்திகள்

மம்முட்டி - மோகன்லால் வீடுகளில் சோதனை

Image Unavailable

 

கொச்சி,ஜூலை.23 - நடிகர்கள் மோகன்லால் மம்முட்டி ஆகியோர்களின் கொச்சி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களில் ஆடம்பர பங்களாக்கள், அலுவலகங்கள் மற்றும் பண்ணை வீடுகள் இருப்பதாக தெரிகிறது. இவைகளில் வருமானவரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். கொச்சியில் உள்ள அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஆனால் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தியது சோதனை அல்ல வெறும் தேடுதல் என்று வருவாய் வரித்துறை இயக்குனர் தெரிவித்தார். வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு கூடுதல் இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் தலைமையில் இந்த சோதனை நேற்றுக்காலை சரியாக 7 மணிக்கு நடைபெற்றது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை நடைபெற்றது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் சோதனை விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: