முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் - தா.பாண்டியன்

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.3 - 10-ம் வகுப்பு தேர்வுகளை பாதிக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாட்டில் பதினான்காவது சட்ட சபைக்கான தேர்தலை நடத்தி, மக்களின் தீர்ப்பைக் பெற்று, புதிய மந்திரி சபை அமைப்பதற்கான தேர்தலுக்கு ஏப்ரல்​13 அன்று வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறுகிற மாதத்தில் தமிழ்நாட்டிலும், அத்துடன் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் மாணவ,​மாணவியர் தேர்வுக்குத் தயாராகி தேர்வை எழுதுகின்ற மாதமாக இருப்பதால், ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்

பெரும் இடையூறாக அமையும்.

ஒரே நாளில் வாக்குப்பதிவு என்பது வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் தேர்தலை. மாணவ, மாணவியரின் தேர்வு முடிந்தவுடன் உரிய காலத்தில் நடத்தி முடித்திடும் வகையில் தேர்தல் வாக்குப் பதிவு நாளை தள்ளி வைக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.   

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago