முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தேதியை மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.4 - தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி தேர்தல் தேதியை மாற்ற கோரி, தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறயிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏப்.13-ந்தேதியன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் குரோசி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தேர்தல் தேதியை மாற்றக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 2-ந்தேதி முதல் 12-ம் வகுப்பு தேர்வுகள் துவங்கியுளஅளது. வருகிற 25-ந்தேதிவரை நடைபெறுகிறது. இதில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வின் போது, தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் போது மாணவர்கள் மத்தியில் எதிர்மறையை உண்டாக்கும். மேலும், ஏப்ரல் 11-ந்தேதிமுதல் 10-ம் வகுப்பு துவங்க இருக்கிறது. அதில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அந்த நேரத்தில் தேர்வுக்காக தயாராவது மட்டும் அல்லாமல் ஆசிர்யர்கள் தேர்தல் பணிக்காக செல்வதால் அவர்களே முழுமையாக மாணவர்களை சரியாக கவனிக்க இயலாது. 

மேலும், கல்லூரி தேர்வுகளும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி உலக தமிழர்களெல்லாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஓட்டு பதிவு என்பது குறைந்த அளவில் பதிவாகும். இதை பயன்படுத்தி வாக்கு சாவடியில் கள்ள ஓட்டு போடுதல் உட்பட பல்வேறு முறைகேடுகள் நடத்தவும் வாய்ப்புள்ளது. இதை போலி வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். இந்த காரணங்களால் அ.தி.மு.க. சார்பாக நான் கேட்டுக் கொள்வது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதியை மாற்றி ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் மாதத்தில் தேர்தலை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago