முக்கிய செய்திகள்

எரிவாயுவுக்கான மானியம் நேரடியாக வழங்க பரிந்துரை

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.10 - மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத் தொகையை மக்களுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்குவது குறித்து மத்திய பணிக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஜெயபால்ரெட்டி கூறியதாவது, இந்த இடைக்கால அறிக்கையை அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இவை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநிலங்களை கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். டெல்லியில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 39.76 ஆகும். இது ரூ. 14. 83 க்கு விற்கப்படுகிறது. இதில் மானியத் தொகை ரூ. 24.93 ஆகும். இந்த மானியத் தொகையை ரொக்கமாக மக்களுக்கு நேரடியாக வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக குடும்ப அட்டைதாரர் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: