முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடுகள்-கறவைமாடுகள் திட்டம் பெண் பயனாளிகளே முன்னுரிமை-ஜெயலலிதா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை.ஆக.- 16 -   தமிழக அரசின் மக்கள் நலதிட்டங்களான ஆடுகள்- கறவைமாடுகள் வழங்கும் திட்டத்தில் பெண்களே  முக்கிய பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு ,அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திரதினவிழாவில் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது: நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம், மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல முன்னோடித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறேன்.  அந்த வகையில், என்னுடைய சிந்தனையில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992​ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் ஆகும்.  இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் சிசுவதை நடந்து கொண்டிருந்தாலும், எனது தலைமையிலான தமிழக அரசு மட்டுமே முதன் முதலாக சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் உறுதி nullண்டு, 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.  2001 ஆம் ஆண்டு, நான் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.  பெண் சிசுக்கொலை நடைமுறையில் இருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கவனிக்கத் தக்க வகையில் இறங்கு முகமாக உள்ளதால், இந்நேர்வில் அரசின் தனிக் கவனம் தேவைப்படுவதை உணர்ந்து, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்க எனது அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்துள்ளது.  பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்னும் ஒரு முன்னோடியான திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை 22,200 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாகவும்; இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தைகளின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை தலா 15,200 ரூபாயில் இருந்து தலா 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  அடுத்ததாக, தங்கத்தின் விலை விண்ணை எட்டும் அளவு ஏறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளிரின் நலன் காக்கும் வகையில், பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கக் காசு வழங்கவும்; கல்வியறிவு பெற்ற மகளிரை ஊக்குவிக்கும் வகையில், அந்தப் பயனாளிகள் பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருப்பின், அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன், திருமண உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.  மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ள காரணத்தால் தான், ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழும், பெண்களையே பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கவும், மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
உண்மையான மக்கள் அரசு, சமூக நீnullதியை நிலை நாட்ட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இந்த அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதில் எனது தலைமையிலான அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காக்கும் வகையில் 11.7.2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு; மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு; ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு; பழங்குடியினருக்கு 1 விழுக்காடு; ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட இந்த அரசாணை வகை செய்துள்ளதன் மூலம் சமூக நீnullதி நிலை நாட்டப்பட்டுள்ளது.  
மேலும், வளமான பிரிவினரை நீnullக்கம் செய்யாமல் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட இந்த அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வாழ்வில் முன்னேற்றம் பெற்று அதன் மூலம் சமூக, பொருளாதார மேம்பாட்டினை அடையும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கிப் பயிலும் விடுதிகள், அவர்கள் செம்மையாகக் கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 1080 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில், 83 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.  அதே போல், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ, மாணவியர் தங்கும் 148 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட இந்த ஆண்டு 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்