முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது: ஈ.வி.கே.எஸ். பேட்டி

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஆக.- 16 - அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக திருப்திகரமாக உள்ளது. நில அபகரிப்பு சட்டம் வரவேற்கத் தகுந்தது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலை ஒழிப்பதற்காக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். முதலில் அவர் ஊழலற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும். அவர் நடத்தி வரும் நிறுவனம் கடந்த 20 வருடங்களாக கணக்கு வழக்குகலை சமர்பிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் வரவு செலவுகள் வேறு வழியில் செலவிடப்படுவதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளது. ராணுவத்தில் இருந்தபோது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் தன் மீது குற்றமில்லை என்று நிரூபித்து விட்டு பின்னர் நாட்டுக்காக போராட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும். இலங்கையை பெறுத்தவரை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  எனவே சர்வதேச சட்டப்படி இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சிக்கவேண்டும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தீவிரவாதத்தை இனிமேல் கட்டுப்பத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலானோர் வற்புறுத்திகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும்.தொண்டர்களின் கருத்தை மேலிடத்திற்கு எடுத்துச்செல்வோம். மேலிடம் அதை ஏற்காவிட்டால் நடவடிக்கை பற்றி பின்னர் கூறுவோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக திருப்திகரமாக உள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக தனி சட்டம் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டகூடியது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் தெய்வநாயகம், அன்னபூர்ணா தங்கராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்