முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாதத்திற்குள்; குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

போடி, ஆக. - 16 - போடியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சரும், போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அ.தி.மு.க பொது செயலாளரும,; தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நலத்திட்ட பணிகள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையான கேபிள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் இணைப்பு ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.  தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் பழைய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், தேனி ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கணேசன், போடி ஒன்றியச் செயலாளர் சற்குணம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்;டத்தில் அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சையதுகான், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின்  தேனி மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், போடி தொகுதி செயலாளர் போதுமணி, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago