முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைத் துறைக்கு முழு விடுதலை: எஸ்.ஏ.சந்திரசேகர்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஆக.19 - தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திரைத் துறைக்கு முழு விடுதலை கிடைத்துள்ளது என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார். மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், 

நடிகர் விஜய் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்கு சென்று நற்பணி மன்றம் சார்பில் ஏழை மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்துக்கு சென்று உதவி பொருட்களை வழங்கினார். இம்மாதம் 28 ம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் உதவிப் பொருட்களை வழங்கவுள்ளார். 

மூன்றுமாவடி புதூரில் உள்ள சி.எஸ்.ஐ. வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் 100 பேருக்கு தையல் எந்திரங்கள், 10 அரசு பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கவுள்ளார். 

விஜய்யின் மக்கள் இயக்கம் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் இல்லை. அரசியல் அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் திரைத்துறைக்கே முழு விடுதலை கிடைத்துள்ளது. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற நான் உதவியாக இருந்தேன். ஆதலால் எனக்கு ஏற்பட்ட இழப்பை திரும்ப பெறுவதில் நான் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!