முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாதலங்களை மேம்படுத்த தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம்., ஆக, 18 - ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண்ராய் நேரடியாக சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து ஆய்வு நடத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி திருஉத்திரகோசமங்கை அரியமான்பீச் தேவிபட்டிணம் ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண்ராய் திருப்புல்லாணி ஆதிஜெகன்நாதபெருமாள் கோவிலுக்கு சென்று தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவும் அந்த பகுதியில் தோட்டக்கலை மற்றும் வனத்துறையினர் மூலம் மலர்ச்செடிகள் வைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டார். ஆலயத்தின் உட்புறம் பக்தர்கள் வசதிக்காக ஓய்வு அறை அமைத்து தரவும் குடிநீர்வசதி செய்து தரவும் கழிப்பறை வசதி செய்து தரவும் உத்தரவிட்டார். திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் ஆலயத்துக்கு சென்ற கலெக்டர் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அரியமான் பீச்சுக்கு சென்ற கலெக்டர் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும்வண்ணம் பொழுதுபோக்கு வசதிகளை செய்து தர உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony