முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஆக - 20 - திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 2 வது படைவீடு திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அவற்றுள் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெற்றது. காலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்திகள் வழியாக வலம் வந்து திருக்கோவில் வந்தடைந்தது. காலை 5.25 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க தந்திரி அரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியேற்றனர். அதனை தொடர்ந்து கொடிமர பீடத்திற்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. கொடிமரம் தர்பை, பட்டாடை மற்றும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து சோடஷ தீபாராதனை நடைபெற்ற பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையார் பாஸ்கரன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, உதவி ஆணையர் செல்லத்துரை, உள்துறை கண்காணிப்பாளர் முத்து, மேலாளர் சுப்பிரமணியன், திருவாவடுதுறை ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான், செந்தில் அருட்பணி அறக்கட்டளை மேலாளர் குத்தாலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன், ஏரல் சேர்மன் கோவில் அக்தார் கருத்தப்பாண்டி நாடார், பிஜேபி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், நிர்வாக அதிகாரி நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், ராமசாமி, மணியம் இராமசுப்பிரமணியன், தமிழரசன், சங்கரகுமார் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும், திருக்கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் சிறப்பாக செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago