நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
jayalalitha 0

 

சென்னை, மார்ச்.- 5 - காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு அக்கட்சியின்  பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கோடையிடி எம்.இ.முருகேசன், திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் எம்.வி.சேகர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி.திம்மராயன் , திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியம் பெரியூர் கிளை அ.தி.மு.க. செயலாளர் கே.கிருஷ்ணசாமி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 

அன்பு சகோதரர்கள் முருகேசன், சேகர், சேகர், திம்மராயன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: