முக்கிய செய்திகள்

தட்கல் டிக்கெட்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.27​- ரயில்வேயில் தட்கல் டிக்கெட்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மேல்சபையில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து பதில் அளித்த அமைச்சர் கவுன்டர் திறந்த ஒரு மணி நேரத்தில் இனிமேல் ஏஜண்ட்களால் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் டிக்கெட்களை புக்கிங் செய்ய முடியாது என்று தெரிவித்தார். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது கவுன்டர் திறந்த ஒரு மணி நேரத்திலேயே புக்கிங் முடிந்துவிடுவது உண்டு. இதற்கெல்லாம் காரணம் ஏஜண்ட்கள்தான் என்று கூறப்படுகிறது. எனவே ஏஜண்ட்கள் டிக்கெட் வாங்குவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 2 டிக்கெட்களுக்கு மேல் ஏஜண்ட்களால் இனி புக்கிங் செய்ய முடியாது. அதேபோல் ஒரு மாதத்தில் 10 டிக்கெட்களுக்கு மேல் புக்கிங் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தட்கல் டிக்கெட்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் 24 மணி ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு 25 சதவீத தொகை மட்டுமே திருப்பித்தரப்படும். 24 மணி நேரத்திற்கு பிறகு டிக்கெட்களை ரத்து செய்தால் தொகை முழுக்க திருப்பி தரப்படமாட்டாது என்றும் அமைச்சர் திரிவேதி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: