முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 29ல் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஆக.- 30 - திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 29ல் துவங்குகிறது. இந்த விழா அக்டோபர் 7ம் தேதி வரை 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.  திருப்பதியில் முதல்நாள் அன்று அதிகாலை தங்க வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வருகின்றனர். அன்று மாலை கொடியேற்ற விழா நடக்கிறது. இரவு 9மணிக்கு பெரியசேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். 2ம் நாளான 30ம் தேதி சிறிய சேஷ வாகனத்தில் காலையிலும், அன்ன வாகனத்தில் இரவும் உற்சவமூர்த்திகள் உலா வருகின்றனர். 3ம் நாள் சிம்ம வாகனத்திலும், 4ம் நாள் கல்பவிருச்ச வாகனத்திலும், 5ம் நாள் மோகினி அலங்காரத்திலும், 6ம் நாள் அனுமந்த வாகனத்திலும் சுவாமி பவனி வருகிறார். 7 வது நாள் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்திலும், 8ம் நாள் காலை தேரோட்டமு, அன்றிரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வலம் வருகிறார். 9ம் நாள் காலை சக்கரஸ்நானமும், அன்றுரவு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தினமும் 5லட்சம் லட்டுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியிலிருந்து திருமலைக்கு 406 சிறப்பு பஸ்களும் முக்கிய விழாவான கருடசேவையன்று 485 சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்யவுள்ளது. விழாவின் போது தினமும் காலை, மாலை இரவு நேரங்களில் இந்து தர்மபிரச்சார துறை மூலமாக பல்வேறு வகையான இசைநிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்