புதிய நிர்வாகிகள் - செயலாளர்கள் முதல்வரிடம் ஆசி

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - அ.தி.மு.க.வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாசறை செயலாளர், தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.செந்தில்நாதன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி.செல்லப்பாண்டியன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்  வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மு.முருகன் எம்.எல்.ஏ ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: