முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான வர்த்தகம் இரண்டு மடங்காகும்: துன் ரசாக்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

கோலாலம்பூர்,செப்.21 - இந்தியாவுடனான வர்த்தகம் வரும் 2015-ம் ஆண்டுக்களு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மலேசிய பிரதமர் ரசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பண்டைய தமிழர் காலத்தில் இருந்து வர்த்தகம் மற்றும் கலாசார உறவு இருந்து வருகிறது. மலேசியாவில் தமிழர்கள் மட்டும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அதனால் இந்தியா-மலேசியா இடைய வர்த்தக ரீதியான உறவு இயற்கையாகவே அமைந்துள்ளது. இருநாடுகளிடையே வர்த்தகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவுடன் 10 பில்லியன் டாலர் அளவுக்கு மலேசியா வர்த்தகம் செய்கிறது. இது வரும் 2015-ம் ஆண்டில் 20 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று மலேசிய நாட்டு பிரதமர் ததுக் சேரி நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடன் இஸ்லாமிக் நிதி, தொழில், ஆயில், கியாஸ், எலக்ட்ரானிக்ஸ், முதலீடு மாற்று எரிசக்தி, பையோ டெக் ஆகிய துறைகளில் உறவை அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் ரசாக் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இருந்து பத்திரிகையாளர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களை தன்னுடைய அலுவலகத்தில் ரசாக் சந்தித்து பேசினார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருநாடுகளிடையேயும் விசா முறையையும் தளர்த்த வேண்டும் என்றார். தற்போது 18 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மலேசியாவுடன் ஒருங்கிணைந்துவிட்டனர். முதலில் இந்தியர்களுக்கு குடும்ப விசா கொடுக்கப்பட்டது. பின்னர் இதை மலேசியா ரத்து செய்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago