முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை செப்.23 - உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்றும், திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் வைகோ பேட்டியளித்தார். அப்போது வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார். இது குறித்து விபரம் வருமாறு:  வரும் உள்ளாட்சி தேர்தலில் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதியளிக்கும் மதிமுக என்ற என்ற ஒரே கோஷத்தை முன்னிறுத்தி ம.தி.மு.க. போட்டியிடும் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று கேட்க தி.மு.க. தலைமைக்கு அறுகதை யில்லை. தி.ம.க. ஆட்சியில் முழுக்கு முழுக்க தேர்தல் ஆணையத்தை கொலைக்களம் ஆக்கினார்கள். வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். த்துக்கள் கைப்பற்றப்பட்டன. முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். ஆகவே தேர்தலை பற்றி விமர்சனம் செய்யக்கூடிய தகுதி கருணாநிதிக்கு கிடையாது. ஜனநாயகத்தனுடைய மென்னியை முறிக்க கூடிய வகையில் நடத்திய கொலை வெறி தாக்குதலை பற்றி பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினர் அப்போது இருந்த தேர்தல் ஆணையரைரைரை தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் பிறகு தான் பாத்த்த்ரூமில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக அரசு 3 தமிழர்களின் தூக்கு தண்டனை குறைக்க கேட்கும் தீர்மானத்தை வரவேற்ப்பதாகவும்,    கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்ப்பதகாவும் வைகோ கூறினார்.

மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்:

1. சென்னை ​ ந. மனோகரன், பி.ஏ.

2. கோவை ​ அரிமா ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்

3. மதுரை ​ ஆ. பாகர சேதுபதி, பி.ஏ.,

4. திருச்சி ​ டாக்டர் ரொஹையா, எம்.பி.பி.எ.

5. ஈரோடு ​ ங்கொடி சாமிநாதன்

6. திருப்ர் ​ அரிமா ஆர். நாகராஜ்

7. திருநெல்வேலி ​ மகேவரி நடராஜன்

8. தூத்துக்குடி ​ பேராசிரியை பாத்திமா பாபு

நகர்மன்றத்தலைவர் வேட்பாளர்கள்:

1. புளியங்குடி ​ டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எ.

2. விருந்தவல்லி ​ டி.ஆர்.ஆர். செங்குட்டுவன்

3. பட்டுக்கோட்டை ​ ஜெயபாரதி விசுவநாதன்

4. குளித்தலை ​ வே. பல்லவிராஜா

5. ஆவடி ​ வழக்கறிஞர் அந்தரிதா

6. சங்கரன்கோவில் ​ சு. ஜெயலட்சுமி

7. சிவகங்கை ​ எம். கார்கண்ணன், பி.ஏ.,பி.எல்.

8. கோபிசெட்டிபாளையம் ​ கீதா மகேந்திரன், எம்.ஏ.பி.ஜி.டி.சி.ஏ.

9. பவானி ​ மு. அறிவழகன்

10. இராமேவரம் ​ கராத்தே பழனிச்சாமி

 11. தாம்பரம் ​ குபேரா ஜெடீநுசங்கர்

12. பல்லாவரம் ​ எம்.இ.சுந்தரம்

13. செங்கல்பட்டு ​ வழக்கறிஞர் சதீஷ் பாபு

14. விருத்தாசலம் ​ அடீநுயாவு

15. கடலுர் ​ ஏ.கே. சேகர்

16. இராசிபுரம் ​ ஆடிட்டர் தங்கவேல்

17. நாமக்கல் ​ எம். புகழேந்திரன்

18. மயிலாடுதுறை ​ கிருஷ்ணவேணி மகாலிங்கம்

19. வாணியம்பாடி ​ அ. நாசிர்கான்

20. தஞ்சாவூர் ​ சுமதி வீரமணி

21. பெரம்பலுர் ​ செ. துரைராஜ், பி.ஏ.

22. அரியலுர் ​ இராம.மனோகரன், பி.காம்.,பி.எல்.,

23. மணப்பாறை ​ எம். லாவதி

24. பொள்ளாச்சி ​ குகன்மில் செந்தில்

மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம்

17 ஆவது வார்டு ​ எ. மாவேல்ராஜ்

14 ஆவது வார்டு ​ விநாயகா ஜி. ரமேஷ்

12 ஆவது வார்டு ​ க. கற்பகசெல்வி

தாயகம், ( வைகோ )

சென்னை ​ 8 பொதுச் செயலாளர்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!