முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ராமதாஸ் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.23 - உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக டாக்டர் ராமதாஸ் மதுரையில் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலை ஒருவாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயாரிக்க முடியும். பரமக்குடி கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பாமகவின் கொள்கையாகும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வாரத்தில் பாமக முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும். திமுக கூட்டணியில் நாங்கள் இருந்த போது குறைகளை சுட்டி காட்டியதால் வெளியேற்றப்பட்டோம். தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைக்காக பாமகவும், விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாநில தலைவர் கோ.க.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், துணை பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்வேல், மாநகர் தலைவர் வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: