முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வெற்றி உறுதி ராஜன்செல்லப்பாவை ஆதரித்து மதுரையில் அமைச்சர்கள் பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 27 -  மதுரையில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து நேற்று அமைச்சர்கள்  செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் செய்தார்கள். மதுரை அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக தல்லாகுளத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தல்லாகுளத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மனுத்தாக்கல் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் காரில் நேராக மாநகாட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கே மனுத்தாக்கல் செய்துவிட்டு அனைவரும் தல்லாகுளம் வந்தனர். தல்லாகுளத்தில் திறந்த ஜீப்பில் மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் பிரசாரம் செய்தனர்.  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்து முதலமைச்சராக ஜெயலலிதாவை அமரவைத்தீர்கள். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.  மதுரை மாநகர் ரவுடிகள் பிடியிலிருந்து மீட்கப்பட்டு மதுரை மக்கள் சுதந்திர காற்றை முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சுவாசித்து வருகிறார்கள். தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை போல் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகள் மற்றும் மேயர் பதவியில் அ.தி.மு.க. வெற்றி பெறும். வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில் சமர்பிப்போம். முதல்வர் ஜெயலலிதாவின் அன்புதம்பி ராஜன்செல்லப்பாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.
 கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார்.  தொண்டர்கள் பொதுமக்களைத்தான் ஜெயலலிதா வின் வாரிசாக கருதுகிறார். மதுரை மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபடவேண்டும். அனைத்து பதவிகளுக்கும் முதல்வர் ஜெயலலிதாதான் வேட்பாளராக நிற்கிறார் என கருதி அவர்களை வெற்றி பெறவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்