முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் போர் விமானம் நொறுங்கி விழுந்தது

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், அக். 8 - ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உத்தர்லாய் விமான நிலையத்திற்கு அருகே இந்திய விமானப் படையை சேர்ந்த மிக் - 21 ரக போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இருப்பினும் இந்த விபத்தில் பைலட் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இந்த விமானம் தனது வழக்கமான பணியில் நேற்று ஈடுபட்டிருந்த போது காலை 11.30  மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. தரையிறங்குவதற்கு தயாராக காத்திருந்தார் பைலட். ஆனால் அந்த நேரம் பார்த்து விமானம் நொறுங்கி விழுந்தது. இருப்பினும் பைலட் ஆபீசர் அமீத் பாதுகாப்பாக குதித்து உயிர் தப்பியதாக ராணுவ பி.ஆர்.ஓ. கோஷ்வாமி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மிக் - 21 ரக போர் விமானங்கள் இப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் இந்த விமானங்களை விமானப் படையில் இருந்தே 2017 க்குள் நீக்கி விட இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது. அதுவரை சோதனை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் கூட விபத்து நேர்ந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!