Idhayam Matrimony

பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
Prashant-Kishore 2024-11-02

Source: provided

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க.- ஜே.டி.யு.-வின் தே.ஜ. கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆ.ஜே.டி.-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது.  பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார். அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார். பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் நேற்று பங்கேற்றனர். 

பிரசாந்த் கிஷோர்  மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து