எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்நிலையில் 60வது முறையாக ட்ரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய ட்ரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன். 350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


