எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்வர் பதவிக்கு சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மேலிடம் முதல்வர் யை தேர்வு செய்வதில் கடும் நெருக்கடியை சந்தித்தது. அவர்கள் 2 பேருடனும் கட்சி மேலிட தலைவர்கள் 4 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் சித்தராமையா முதல்வர் யாக அறிவிக்கப்பட்டார். டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். மேலும் முதல்வர் பதவி ஆளுக்கு 2.5 ஆண்டுகள் என்று காங்கிரஸ் மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் திடீரென்று போர்க்கொடி எழுந்துள்ளது. அதாவது துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர், 9 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.சி. என மொத்தம் 12 பேர் திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை நேரில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்த உள்ளனர். ஆனால் சித்தராமையா, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சி மேலிடம் முடிவு எடுத்தால் வரும் நாட்களில் ஆட்சி சுமுகமாக நடைபெறுவது சிரமம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் டி.கே.சிவக்குமாருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் மேலிடம் தள்ளப்பட்டு உள்ளது. கர்நாடக அரசியலில் அடுத்து பல திருப்பங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


