முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      உலகம்
Tejas-fighter 2025-11-21

Source: provided

துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

இந்நிலையில், துபாய் விமான கண்காட்சியில் நேற்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து