எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை ட்ரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த ட்ரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நியூயார்க் மேயர் மம்தானி இன்று வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நியூயார்க் நகர கம்யூனிஸ்ட் மேயர் ஜோஹ்ரான் மம்தானி என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


