முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் வீட்டையும், ஊரையும் காப்பாற்றுவதற்கு அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்-கே.தமிழரசன் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 10 - உங்கள் வீட்டையும், ஊரையும் காப்பாற்றுவதற்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கே.தமிழரசன் எம்எல்ஏ கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார்.   மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரை கிழக்குத்தொகுதியில் உள்ள மேற்கு கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம புறப்பகுதிகளில் கே.தமிழரசன் எம்எல்ஏ அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை மதுரை மேற்கு ஒன்றியத்தில் சுந்தர்ராஜன்பட்டி கிராமத்தில் இருந்து தமிழரசன் எம்எல்ஏ பிரச்சாரத்தை தொடங்கி, ஒன்றிய பகுதிகளில்  கிராமம், கிராமமாக சென்று  பேய்குளம் கிராமத்தில் நேற்று இரவு வரை பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.    இந்த பிரச்சாரத்தின் போது கிராம மக்களிடையே கே.தமிழரசன் எம்எல்ஏ பேசியதாவது, கடந்த தேர்தலில் நீங்கள் அனைவரும் தமிழகத்தை சுடுகாடாக்கி ஒரு அக்கிரம குடும்ப ஆட்சியை நடத்தி வந்த திமுக தலைவர் கருணாநிதியை அப்புறப்படுத்தி அதிமுகவிற்கு ஒரே முகமாக வாக்களித்து வெற்றி பெற செய்து அம்மாவை முதல்வர் அரியணையில் ஏற்றினீர்கள். அதனால் அவரது தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அம்மா அறிவித்துள்ள நலத்திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடிகொண்டு வந்து சேர்ப்பதற்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு நீங்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் நாட்டைக்காப்பாற்ற அம்மாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததை போல உள்ளாட்சி தேர்தலில்  உங்கள் வீட்டையும், ஊரையும் காப்பாற்ற அதிமுகவிற்கு வாக்களியுங்கள். நான் எம்எல்ஏவாக இருந்தாலும் முதல்வர் அம்மா சொல்லும் வேலையை உங்களுக்காக செய்யும் ஒரு வேலைக்காரன்தான். உங்கள் வீட்டிற்கு, உங்கள் ஊருக்கு காவல்காரனாக எப்போதும் இருப்பேன். எனவே வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.    பிரச்சாரத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன், மாவட்ட கவுன்சில் அதிமுக வேட்பாளர் கருப்பையா, ஒன்றிய கவுன்சில் அதிமுக வேட்பாளர்கள் கருப்பாயி மஞ்சன் மற்றும் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்