முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கீகாரம் பெற மாநில கட்சிகள் 8 சதவீத வாக்குகள் பெற்றால் போதும்-தேர்தல் கமிஷனின்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 13 - மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் 8 சதவீத வாக்குகள் பெற்றால் போதும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மாநில அளவிலான கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்த கட்சிகள் ஒரு தேர்தலில் பதிவான ஓட்டுக்களில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தால் 30 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி என்ற அளவை எட்டி விட வேண்டும். பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விதிமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் எளிமைப்படுத்தி உள்ளது. இது குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி கூறியதாவது, சில கட்சிகள் தேர்தலில் 8 முதல் 10 சதவீத வாக்குகள் பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் அங்கீகாரம் பெற முடியாமல் போய் விடுகிறது. இது குறித்து பல்வேறு கட்சிகளிடம் இருந்து முறையீடுகள் வந்துள்ளன. எனவே அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தி மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறோம். அதன்படி மாநில கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் 8 சதவீத ஓட்டுக்கள் பெற்றிருந்தால் அந்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் வழங்கப்படும். இதன் மூலம் அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்தி இருக்கிறோம் என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!