முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைச்சர் மாலை

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.18 - அதிமுக 40 வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஏ.கே.போஸ் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.  மறைந்த தலைவர் எம்ஜிஆர் அதிமுக கட்சியை துவங்கி 39 ஆண்டுகள் நிறைவடைந்து 40 வது ஆண்டு துவங்கியதை  நேற்று அதிமுகவினர் மதுரையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணை செயலாளர் சி.தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, வடக்கு தொகுதி இணைசெயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.சுப்பு, இளைஞரணி துணைசெயலாளர் எம்.ஏ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!